கைத்தொழில் சேவைகள் பிரிவு

industrial_servicesDIV

நாம் என்ன செய்கின்றோம்?

பிரிவானது பிரதானமாக, சோதனை மற்றும் அளவீட்டு கருவிகளின் தரங்கணிப்பு, செயலாற்றுகை சோதனை மற்றும் அளவீட்டு சேவைகள் மற்றும் மின்னியல், மின்னணுவியல் ஆய்வுகூட கருவிகளில் ஏற்படக்கூடிய வன்பொருள் திருத்தற் சேவைகள் போன்ற மின்னணுவியல் கைத்தொழிற்துறை சார்ந்த பரப்பெல்லைகளுக்கு உசாவுத்துணை சேவைகளை வழங்குவதற்கு தாபிக்கப்பட்டுள்ளது.

எமது தரங்கணிப்பு ஆய்வுகூடமானது Fluke 5520A பல் உற்பத்தி தரங்கணிப்பி, Transmille 3200 மின்னியல் தரங்கணிப்பி மற்றும் சுவடுகாண் தரங்கணிப்பிற்காக மிக நுண்ணிய தொழில்நுட்பத் திறன் வாய்ந்த அளவீட்டுக் கருவிகள் போன்ற கருவிகளை ‘ISO 9000’ கட்டளைகளுக்கு அமைவுற கொண்டுள்ளது.

கருவிகள் தரங்கணிப்புச் சேவைகள்

ISO 9000 தர கட்டளைகள் தொடர்பில் அதிகரித்து வருகின்ற உலகளாவிய ரீதியிலான ஏற்கும் தன்மையானது, சோதனை மற்றும் அளவீட்டுக் கருவிகளின் சுவடுகாண் தரங்கணிப்பிற்குரிய வர்த்தக ரீதியிலான கோரிக்கையை பொதுவாக அதிகரிப்பதற்கான பாதையினை வகுத்துள்ளது.

தரங்கணிப்பு ஆய்வுகூடமானது, தனது சேவையை விசேடமாக மின்னணுவியல் மற்றும் அளவீட்டுக் கருவிகளுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது ஆய்வுகூடத்தின் அமெரிக்க ஐக்கிய அரசின் உதவியுடன் பெற்றுக்கொண்ட Fluke 5520A பல் உற்பத்தி தரங்கணிப்பி உள்ளது. அலைவுநோக்கிகள், பல்மானிகள், மின்னியல் மானிகள், மற்றும் வலுபகுப்பாய்விகள் போன்ற இதர பல சோதனை கருவிகளை எமது ஆய்வுகூடம் கொண்டிருப்பதன் மூலம் அநேக அளவிலான சோதனை மற்றும் அளவீட்டுக் கருவிகளை எமது ஆய்வுகூடம் கொண்டுள்ளது. Insulation சோதனைக் கருவிகள், Loop சோதனைக் கருவிகள், RCCB சோதனைக் கருவிகள் மற்றும் Hipot சோதனைக் கருவிகள் ஆகியவற்றை தரங்கணிப்பதற்கு Transmille 3200A பயன்படுத்தப்படுகின்றது.

மிக உயர் தொழில்நுட்பத் திறனுடைய மின்னணுவியல் கருவிகளினை திருத்துதல்

கைத்தொழிற்துறையினருக்கு அவர்களுடைய மின்னணுவியல் சோதனை மற்றும் அளவீட்டு கருவிகளை திருத்துவதற்கான உசாவுத்துணை சேவைகள் வழங்கப்படுகின்றது.

கைத்தொழிற்துறையினருக்கான உசாவுத்துணை சேவைகள்

வேறுபட்ட வகையினைச் சார்ந்த கருவிகளுக்கு செயலாற்றுகை சோதனை மற்றும் அளவீட்டுச் சேவைகள் வழங்கப்படுவதுடன் மாதிரி சோதனைகளை முன்னெடுத்தலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

எமது பணிகளை ஆற்றும் குழுவினர்

  • பி. டி. சம்பிகா ஜனசாந்தி, சிரேட்ட மின்னணுவியல் எந்திரி

பிரிவின் தலைவர். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பாடல் பரப்பெல்லையில் முதுமானிப்பட்டத்தைப் பெற்றவர். ஆர்வமுடைய பரப்பெல்லைகள் – நுண்கட்டுப்படுத்தி, கைத்தொழிற்துறை தன்னியவாக்கம் மற்றும் சோதனையும் தரங்கணிப்பும்.

  • யூ. டி. நிரில்லா, ஆராய்ச்சி எந்திரி

இளம் விஞ்ஞானமானி, எந்திரவியல், மொறட்டுவ பல்கலைக்கழக பட்டதாரி. இவர் மின்னணுவியல் நுண்கட்டுப்படுத்தி மற்றும் கைத்தொழிற்துறை தன்னியவாக்கம் ஆகிய பரப்பெல்லைகளில் ஆராய்ச்சி செய்ய ஆர்வமுடையவர்.

  • விஜய சோதி விஜய கோபால், மின்னணுவியல் எந்திரி

இலங்கை எந்திரவியலாளர் நிறுவகத்தின் பட்டதாரி. இவர் IESL (AMIESL) இன் இணை உறுப்பினர் ஆவார். இவர் வலு மின்னணுவியல் மற்றும் கைத்தொழிற்துறை தன்னியவாக்கம் ஆகிய பரப்பெல்லைகளில் ஆராய்ச்சி செய்ய ஆர்வமுடையவர்.

  • பீ. கே. பியல் அநுருந்த, எந்திரவியல் உதவியாளர்
  • கே. ஏ. கீர்த்தி குணசேகர, தொழில்நுட்பவியல் அலுவலர்
  • கே. எஸ். சமீரா ரொஷான், தொழில்நுட்பவியல் உதவியாளர்
  • கே. ஏ. சமுது லக்ஷித பெரேரா, முகாமைத்துவ உதவியாளர்