மின்னணுவியல் மற்றும் நுண்மின்னணுவியல் பிரிவு

electronic_divisionDIV

நாம் என்ன செய்கின்றோம்?

மின்னணுவியல் பிரிவினால் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்கள், சோதனை மற்றும் அளவீட்டு சேவைகள், உசாவுத்துணை பணிகள், வன்பொருள் திருத்தற் சேவைகள் மற்றும் கைத்தொழிற்துறைக்கான தொடர் தொழில்சார் அபிவிருத்தி கற்கைநெறிகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. பிரிவானது பிரதானமாக தனது அவதானத்தை கைத்தொழிற்துறைசார் ஆராய்ச்சி அபிவிருத்தி நடவடிக்கைகளில் விசேடமாக நுண் கட்டுப்படுத்தியினை அடிப்படையாகக் கொண்ட முறைமை வடிவமைப்பு, தரவு உட்பதிகை மற்றும் காட்சிப்படுத்தல் முறைமைகள், உணரிகளின் பிரயோகம் ஒப்புமை (Analog) சுற்றமைப்பு வடிவமைப்பு மற்றும் வலு வரி தரவுப்பெறுகை (Power line data acquisition) ஆகிய விடயங்கள் தொடர்பில் செலுத்துகின்றது. இதைவிட சர்வதேச கட்டளைகளுக்கு அமைவுற சோதனைகளை முன்னெடுப்பதற்கான பல சோதனை வசதிகளை பிரிவு கொண்டுள்ளது. மேலும் கைத்தொழிற்துறைக்காக வேறுபட்ட தொடர் தொழில்சார் அபிவிருத்தி கற்கைநெறிகளை பிரிவு முன்னெடுக்கின்றது. இதைவிட சோதனை மற்றும் அளவீட்டுக் கருவிகளுக்கும் அத்துடன் மிக நுண்ணிய தொழில்நுட்பத் திறன் வாய்ந்த கருவிகளுக்கும் வன்பொருள் திருத்தற் சேவைகளை நிறுவகம் முன்னெடுக்கின்றது.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்கள்

பிரிவானது பல ஆராய்ச்சி அபிவிருத்தி கருத்திட்டங்களை வெற்றிகரமாக பூரணப்படுத்தியுள்ளதுடன் இவற்றுள் சில தொழில்நுட்ப மாற்றீடு செய்யப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளன. தற்போது பிரிவானது, தன்னியக்கமாக இயங்கக்கூடிய வைத்தியசாலைக்கட்டில் மற்றும் உண்மையான RMS மின் வலியளவு பதிவியின் தரமுயர்த்தப்பட்ட பதிப்பு ஆகிய கருத்திட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.

வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி பரப்பெல்லைகள்

 • வலு வரி தரவுப்பெறுகை மற்றும் உட்பதிகை முறைமை
 • வலு தரம் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு
 • சூரிய சக்தியால் இயங்கக்கூடிய சாலை விளக்குகள்
 • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கூடிய சமிக்ஞை முறைமை
 • காட்சிப்படுத்தல் முறைமை
 • தன்னியக்கமாக இயங்கக்கூடிய கம்பியில்லா தந்தி நீர்பாசன முறைமை

செயல் திறனும் நிபுணத்துவமும்

 • நுண் செயல்முறையாக்கம் / நுண் கட்டுப்படுத்தியினை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்படுத்தி முறைமை வடிவமைப்பு
 • தரவு உட்பதிகை மற்றும் காட்சிப்படுத்தல் முறைமை
 • உணரிகள் பிரயோகம் மற்றும் சுற்றமைப்பு வடிவமைப்பு
 • சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய விளக்கு முறைமை
 • ஒப்புமை சுற்றமைப்பு வடிவமைப்பு
 • வலு வரி தரவுப்பெறுகை

பிரிவானது கைத்தொழிற்துறைக்காக தொடர் தொழில்சார் அபிவிருத்தி கற்கைநெறிகளையும் மற்றும் இலங்கை வாழ் இளைஞர் சமுதாயத்தினருக்காக இடைநிலை கற்கைநெறிகளையும் முன்னெடுக்கின்றது.

எமது பணிகளை ஆற்றும் குழுவினர்

 • ஜானகி அத்துரலிய, முதன்மை ஆராய்ச்சி எந்திரி

பிரிவின் தலைவர் – இளம் விஞ்ஞானமானி, எந்திரவியல் பட்டதாரி (சிறப்பு) மொறட்டுவ பல்கலைக்கழகம். இவர் விஞ்ஞானத்தில் முதுமானிப் பட்டத்தையும் மொறட்டுவ பல்கைல்கழகத்தில் பெற்றுள்ளார். இவர் ஒரு பட்டய எந்திரி என்பதுடன் IESL மற்றும் IET (ஐக்கிய இராஜ்ஜியம்) இன் உறுப்பினருமாவார். இவர் நுண்கட்டுப்படுத்தியினை அடிப்படையாகக் கொண்ட முறைமை வடிவமைப்பு மற்றும் எழுச்சி காப்பு முறைமை ஆகிய துறைகளில் ஆராய்ச்சியினை முன்னெடுப்பதில் ஆர்வம் உடையவர்.

 • நிரூபா ரத்னாயக்க, சிரேட்ட ஆராய்ச்சி எந்திரி

இளம் விஞ்ஞானமானி எந்திரவியல் பட்டதாரி, எந்திரவியல் மற்றும் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் – லாகூர், பாக்கிஸ்தான். இவரும் விஞ்ஞானத்தில் முதுமானிப்பட்டத்தை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவர் வலு மின்னணுவியல் மற்றும் நுண் கட்டுப்படுத்தியினை அடிப்படையாகக் கொண்ட முறைமை வடிவமைப்பு துறையில் ஆராய்ச்சியினை முன்னெடுப்பதில் ஆர்வம் உடையவர்.

 • என். ஏ. ஏ. நதீஷா தில்ருக்‌ஷி, ஆராய்ச்சி எந்திரி

இளம் விஞ்ஞானமானி பட்டத்திற்கு சமனான ஒரு பட்டத்தை இலங்கை எந்திரவியலாளர்கள் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ள பட்டதாரி ஆவார். இவர் வலு மின்னணுவியல் மற்றும் நுண் கட்டுப்படுத்தியினை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வம் உடையவர்.

 • பிரசன்னா மகாதேவன், ஆராய்ச்சி எந்திரி

இளம் விஞ்ஞானமானி (சிறப்பு) மலேசியாவில் உள்ள UCSI பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். இவர் IESL இன் இணையுறுப்பினர் ஆவார். இவர் உட்பதிக்கப்பட்ட முறைமை மற்றும் வலையமைப்பு துறையில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வமுடையவர்.

 • ஏ. என். நாணயக்கார, ஆராய்ச்சி எந்திரி

இவர் மின்னணுவியல் மற்றும் தகவல் எந்திரவியல் துறையில் இளம் விஞ்ஞானமானிப் பட்டத்தை 2014 ஆம் ஆண்டில் ருஹூனு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். இவர் வலு முறைமை மற்றும் வலு மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வமுடையவர்.

 • துஷிதா டயஸ், தொழில்நுட்பவியல் அலுவலர்
 • எஸ். ஆர். ஜே. எஸ். பண்டார, தொழில்நுட்பவியல் அலுவலர்
 • சமீரா பனமல்தெனிய, தொழில்நுட்பவியல் அலுவலர்
 • எம். எம். குலதுங்க, முகாமைத்துவ உதவியாளர்
 • என். டி. என். குமார, ஆய்வுகூட நடத்துனர்