தொடர்பாடல் பிரிவு

communicationsDIV

நாம் என்ன செய்கின்றோம்?

தொடர்பாடல் பிரிவினால் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்கள், சோதனை மற்றும் அளவீட்டு சேவைகள், உசாவுத்துணை பணிகள், ஆழமான ஆராய்வு மற்றும் உயர்ந்த அளவில் வன்பொருள் திருத்தற் சேவைகள், கைத்தொழிற்துறைக்கான தொடர் தொழில்சார் அபிவிருத்தி கற்கைநெறிகள் மற்றும் இளைஞர்களுக்கான இடைநிலை கற்கைநெறிகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. பிரிவானது பிரதானமாக தனது அவதானத்தை கைத்தொழிற்துறைசார் ஆராய்ச்சி அபிவிருத்தி நடவடிக்கைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் உட்பதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு முறைமை வடிவமைப்பு, SCADA முறைமை, RF ID தீர்வுகள், கம்பியுள்ள மற்றும் கம்பியில்லா வலையமைப்புக்களில் தரவுபெறுகை மற்றும் தொடர்பாடல்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் செலுத்துகின்றது. இதைவிட பிரிவானது கையடக்கத்தொலைபேசி மற்றும் ஒலிபரப்பு கைத்தொழிற்துறைக்காகவும் மற்றும் கம்பியுள்ள வலையமைப்புப் பணிகளுக்கும் வானொலி அதிர்வெண் பிரயோக சோதனை வசதிகளை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு அமைவுற CCTV வனொலி அதிர்வெண் பிரயோகம் மற்றும் இயந்திர மின்னியல் ஆகிய துறைகளில் உசாவுத்துணை பணிகளை முன்னெடுப்பதற்கு பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், பிரிவானது தொடர் தொழில்சார் அபிவிருத்தி மற்றும் இடைநிலை கற்கைநெறிகளை கைத்தொழிற்துறை சமுதாயத்தினருக்காகவும் மற்றும் பொதுவாக இளைஞர்களுக்காகவும் முன்னெடுக்கின்றது. மேலும், மின்னணுவியல் வன்பொருளை அடிப்படையாகக் கொண்ட கருவிகளிலிருக்கின்ற பிழைகளைக் கண்டறிந்து அவற்றை reverse எந்திரவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருத்தற் பணிகளில் பிரிவு ஈடுபடுகின்றது.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்கள்

பிரிவானது பல ஆராய்ச்சி அபிவிருத்தி கருத்திட்டங்களை வெற்றிகரமாக பூரணப்படுத்தியுள்ளதுடன் இவற்றுள் சில தொழில்நுட்ப மாற்றீடு செய்யப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளன. தற்போது பிரிவானது, சேய்மை நீர்தேக்க மட்ட கண்காணிப்பு உட்பதிகை, சூரிய சக்தியினை அடிப்படையாகக் கொண்டு semaphore சமிக்ஞைகளுக்கான தீர்வுகள், இரயில் பாதை கடவை மணி, டீசல் பிறப்பாக்கிகளுக்கான (Generations) bearing வெப்ப கண்காணிப்பு இடைமுகம் நூலக தன்னியக்கவாக்க செயன்முறைகளுக்கான RF ID கள்.

வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி பரப்பெல்லைகள்

 • வலு வரி தரவுப்பெறுகை மற்றும் உட்பதிகை முறைமை
 • SCADA முறைமை
 • ஒப்புமை மற்றும் இலக்கு இடைமுகங்கள்
 • காட்சிப்படுத்தல் முறைமை
 • புகையிரத கைத்தொழிற்துறைக்கான தீர்வுகள்
 • ELV பிரயோகங்கள்

செயல் திறனும் நிபுணத்துவமும்

 • நுண் செயல்முறையாக்கம் / நுண் கட்டுப்படுத்தியினை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்படுத்தி முறைமை வடிவமைப்பு
 • தரவு உட்பதிகை மற்றும் காட்சிப்படுத்தல் முறைமை
 • உணரிகள் பிரயோகம் மற்றும் சுற்றமைப்பு வடிவமைப்பு
 • சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய விளக்கு முறைமை
 • ஒப்புமை சுற்றமைப்பு வடிவமைப்பு
 • CCTV மற்றும் நுழைவு கட்டுப்படுத்தி முறைமை

பிரிவானது கைத்தொழிற்துறைக்காக தொடர் தொழில்சார் அபிவிருத்தி கற்கைநெறிகளையும் மற்றும் இலங்கை வாழ் இளைஞர் சமுதாயத்தினருக்காக இடைநிலை கற்கைநெறிகளையும் முன்னெடுக்கின்றது.

எமது பணிகளை ஆற்றும் குழுவினர்

 • கவிந்திரா ஜயவர்தண, முதன்மை ஆராய்ச்சி எந்திரி

பிரிவின் தலைவர் – இளம் விஞ்ஞானமானி, எந்திரவியல் பட்டதாரி (சிறப்பு) மொறட்டுவ பல்கலைக்கழகம். இவர் பட்டப்பின் படிப்பு பட்டத்தை மொறட்டுவ பல்கைல்கழகத்தில் பெற்றுள்ளார். இவர் ஒரு பட்டய எந்திரி என்பதுடன் IESL மற்றும் IET (ஐக்கிய இராஜ்ஜியம்) இன் உறுப்பினருமாவார். இவர் நுண்கட்டுப்படுத்தியினை அடிப்படையாகக் கொண்ட முறைமை வடிவமைப்பு மற்றும் உயர் வன்பொருள் திருத்தற் சேவைகள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியினை முன்னெடுப்பதில் ஆர்வம் உடையவர்.

 • பி. ஜி. எஸ். புஷ்பகுமார, ஆராய்ச்சி விஞ்ஞானி

இவர் இளம் விஞ்ஞானமானி (பௌதீகவியல்) பட்டதாரி, ஶ்ரீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகம் – இவர் கைத்தொழிற்துறை தன்னியவாக்கத்தில் முதுமானிப்பட்டத்தை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவர் மனித எந்திரவியல், மின்னணுவியல் மற்றும் நுண்மின்னணுவியலை அடிப்படையாகக் கொண்ட முறைமை வடிவமைப்பு ஆகிய துறையில் ஆராய்ச்சியினை முன்னெடுப்பதில் ஆர்வம் உடையவர்.

 • ஒஷாடி தல்பாவில, ஆராய்ச்சி எந்திரி

இளம் விஞ்ஞானமானி பட்டத்திற்கு சமனான ஒரு பட்டத்தை இலங்கை எந்திரவியலாளர்கள் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ள பட்டதாரி ஆவார். இவர் வலு மின்னணுவியல், உட்பதிக்கப்பட்ட முறைமை மற்றும் தன்னியக்கவாக்க மின்னணுவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வம் உடையவர்.

 • ராஜித பிரசன்ன, ஆராய்ச்சி எந்திரி

இளம் எந்திரவியல்மானி பட்டதாரி (சிறப்பு) மலேசியாவில் உள்ள Swinburne பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். இவர் அவுஸ்திரேலியாவின் எந்திரவியலாளர்கள் நிறுவகத்தின் அங்கத்தவராவார். இவர் மனித எந்திரவியல் மற்றும் இயந்திர மின்னணுவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வமுடையவர்.

 • ஆர். ஏ. டி. கே. சம்பத், மின்னணுவியல் எந்திரி

இவர் BTech (எந்திரவியல்) மின்னணுவியல் மற்றும் தொடர்பாடல் எந்திரவியல் பட்டதாரி – இலங்கை திறந்த பல்கலைக்கழகம். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தன்னியவாக்கம் என்னும் துறையில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா / விஞ்ஞான முதுமானியினை கற்றுக்கொண்டிருப்பவர். இவர் உட்பதிக்கப்பட்ட முறைமை வடிவமைப்பு மற்றும் மனித எந்திரவியல் கட்டுப்பாட்டு முறைமை ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வமுடையவர்.

 • ஜயானி கல்கெட்டிய, ஆராய்ச்சி எந்திரி

எந்திரவியலில் முதுமானிப்பட்டத்தைப் பெற்றவர். ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் எந்திரவியலில் படடம்பெற்ற பட்டதாரி. இவர் உட்பதிக்கப்பட்ட முறைமை, இலக்கு சமிஞை செயன்முறை மற்றும் சில்லு வடிவமைப்பு முறைமை ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வமுடையவர்.

 • கயான் சம்பத், ஆராய்ச்சி எந்திரி

இளம் விஞ்ஞானமானி – எந்திரவியல் (சிறப்பு) – எந்திர இயந்திரவியல் துறையில் (மனித எந்திரவியல் மற்றும் தன்னியவாக்கத்தில் சிறப்பு) மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. இவர் UAV முறைமை, ஒப்புமை, இலக்கு மின்னணுவியல் வடிவமைப்பு மற்றும் பிரயோகம், வலு மின்னணுவியல் வடிவமைப்பு மற்றும் பிரயோகம் Photovoltaic grid tied inverters, வடிவமைப்பு, Non-liner controlling and Optimal Controllers ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் ஆர்வமுடையவர்.

 • தினுஷா சில்வா, எந்திரவியல் உதவியாளர்
 • பிரசன்னா ஜயதேவ, எந்திரவியல் உதவியாளர்
 • சிந்தக்க ரணவக்க, தொழில்நுட்பவியல் அலுவலர்
 • டிலான் பீரிஸ், தொழில்நுட்பவியல் அலுவலர்
 • நதீகா கண்டம்பி, செயலாளர்
 • வஜிரா நளின் சில்வா, ஆய்வுகூட நடத்துனர்