எம்மை பற்றி

technology_transfer_Over_vision

எமது பணிப்பாணை

தொடர்பாடல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், நுண்மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மனித எந்திரவியல், ஒளிப்படவியல் மற்றும் ஏனைய சாதனங்கள் போன்ற நவீன மற்றும் தொழில்நுட்பங்களின் பிரயோகத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியினை தொடங்குதல், மேம்படுத்துதல் மற்றும் முன்னெடுத்தலினூடாக அந்த நவீன தொழில்நுட்பவியலின் அறிமுகத்தை விரைவுபடுத்தல்.

நிறுவகத்தின் வரலாறு

தொடர்பாடல், கணிணிச்சக்தி விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மனித எந்திரவியல் ஆகிய நவீன தொழில்நுட்பத்துறைகளினை அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் அவற்றின் அபிவிருத்தி செயன்முறைகளை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளினை வழங்குவதனூடாக விரைவுபடுத்துவதற்கும் பாராளுமன்ற சட்டத்தினூடாக 1984 ஆம் ஆண்டு இந்த நிறுவகமானது நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிலையம் என்ற பெயரில் தாபிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அடிப்படை உள்ளகமைப்பு வசதிகள் தாபிக்கப்பட்டதுடன் 1987 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொழில்நுட்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விஞ்ஞான தொழில்நுட்ப சட்டத்தினூடாக நி​லையமானது நவீன தொழில்நுட்ப ஆர்த்தர். சி. கிளார்க் நிறுவகம் என மீள் பெயரிடப்பட்டது.

இன்று

இன்றைய நிலையில் நிறுவகத்தினை நோக்கும்போது நிறுவகமானது தொடர்பாடல், மின்னணுவியல், நுண்மின்னணுவியல், விண்வெளிப் பிரயோகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறப்பாக ஈடுபட்டுள்ளது. இத்தகைய நவீன தொழில்நுட்பத்துறைகளில் சுய சார்புடைய ஒரு நிறுவகமாக, நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிறுவகத்தை நிலைநிறுத்துவதற்கு எந்திரவியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இவ்விடயத்துடன் தொடர்புடைய ஏனைய தொழில் சார்பியலாளர்கள் ஆகியோர் தமது அயராத உழைப்பை வழங்குகின்றனர்.

இதைவிட விரிவான ஆராய்ச்சி அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிறுவகமானது முழு முயற்சியாக தன்னை ஈடுபடுத்திக்கொள்வதுடன் தொடர் தொழில்சார் அபிவிருத்தி (CPD) நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் முன்னெடுக்கின்றது. கைத்தொழிற்துறையினருக்கு உசாவுத்துணை சேவைகள் வழங்குவதுடன் நிறுவகமானது, உற்பத்திகளின் அபிவிருத்தி தொடர்பில் உள்ளகமைப்பு மற்றும் மனிதவள சேவைகள், மின்னணுவியலின் கைத்தொழிற்துறை பிரயோகங்களுக்கான முறைமைகள் மற்றும் தொழில்நுட்பவியல் சேவைகள் அத்துடன் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

நடப்பு சேவைகள்

  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
  • தொடர் தொழில்சார்பியல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்
  • உசாவுத்துணை சேவைகள் / கைத்தொழிற்துறையினருக்கு உதவிகள்
  • இளைஞர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
  • நூலகம் / தகவல் சேவைகள்

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி

நிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூடங்களாவன நவீன கருவிகள் மற்றும் கணிணி முறைமையின் துணையுடன் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருப்பதுடன் இது, மின்னணுவியல், தொலை தொடர்பாடல் மற்றும் நுண் செயல்முறையாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வன்பொருளின் பிரயோக ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அபிவிருத்திக்கு ஆதாரமாக அமைகின்றது. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை உயர் தொழில்நுட்பம் மிகுந்த உற்பத்தி பொருட்களாக தரமுயர்த்தும் நோக்குடன் நிறுவகமானது தற்போது வேறுபட்ட வகையினைச் சார்ந்த கேள்வியை நோக்கியதான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களை அரச மற்றும் தனியார் துறையினரிடமிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச ரீதியாக போட்டியிடக்கூடிய தகைமை உடைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் நிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் குழுவானது குறிப்பிட்டு சொல்லத்தக்களவு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.

தொடர் தொழில்சார் அபிவிருத்தி (CPD) நிகழ்ச்சித்திட்டங்கள்

உள்ளூர் கைத்தொழிற்துறையினைச் சார்ந்த துறைகளில் சேவையாற்றும் தொழில்சார்பியலாளர்கள் மற்றும் சிரேட்ட முகாமையாளர்களைக் கருத்திற்கொண்டு அவர்களுக்காக உயர் தொழில்நுட்ப திறமுறைகளை உள்ளடக்கிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை காலத்திற்குக் காலம் நிறுவகம் அறிவிக்கின்றது. இந்த குறுந் தவணை பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களாவன நுண் இலத்திரனியல் பிரயோகம், தொடர்பாடல், சேய்மை உணரி மற்றும் GIS அத்துடன் கணிணி முறைமைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் அதி அண்மித்த தகவல்களை வழங்குகின்றது. இந்த குறுந் தவணை கற்கைநெறிகளாவன செய்கைமுறை சார் பயிற்சிகளை கணிசமான அளவில் உள்ளடக்கியுள்ளது.

உசாவுத்துணை சேவைகள் / கைத்தொழிற்துறையினருக்கு உதவிகள்

உயர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைத்தொழிற்துறை சார் முறைமைகளை முகாமைத்துவம் செய்தலிலும் தமது சேவையை வழங்குவதிலும் சிறந்த அனுபவத்தையும் உயர்ந்த திறனையும் கொண்ட நிறுவகத்தின் தொழில்சார்பியலாளர்கள் தமது நிபுணத்துவத்தையும், ஆய்வுகூட வசதிகளையும், நுண் செயன்முறையாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இயந்திரம், தொலை தொடர்பாடல் முறைமை, தகவல் முறைமை மற்றும் கணிணி வலையமைப்பு போன்ற இதர வகையினைச் சார்ந்த நவீன கைத்தொழிற்துறை முறைமைகளிற்கு உதவிசெய்யவும் அவற்றினை முகாமைத்துவம் செய்தலிற்கும் உதவும் நோக்குடன் தமது சேவையை உள்ளூர் கைத்தொழிற்துறையினருக்கு வழங்குகின்றனர்.

இளைஞர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

இளம் சமுதாயத்தினரின் திறனை அபிவிருத்தி செய்வதில் உறுதுணையாக இருக்கும் நோக்குடன் நிறுவகமானது மின்னணு எந்திரவியல் அதுபோன்று ஏனைய நவீன தலைப்புக்களுடன் தொடர்புடைய விடயங்களில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டங்களில் சில உள்ளூர் மற்றும் வெளியூர்களினைச் சார்ந்த பங்குபெறுனர்களினிமித்தம் ஏனைய கைத்தொழிற்துறை நிறுவனங்களுடன் கூட்டிணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.

யப்பானிய அரசாங்கத்தினால் 45 செ. மீ cassagrain பிரதிபலிப்பு தொலைநோக்குக்காட்டி நன்கொடையாக வழங்கப்பட்டதினால் நிறுவகமானது ஒரு மாவட்ட மட்ட வானியல் ஆராய்ச்சி பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை பள்ளிக்கூட மாணவர்களுக்காக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது வானியல் ஆராய்ச்சி தொடர்பில் விரிவுரைகள் மற்றும் செய்கை முறை சார் அவதானிப்புக்களை உள்ளடக்கும்.

நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் நூலகம் / தகவல் சேவைகள்

தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்பவியல் அல்லாத தொழில் சார்பியலாளர்கள் மற்றும் தனியார் மற்றும் அரசதுறை நிறுவனங்களைச் சார்ந்த முடிவு எடுத்துணர்கள் ஆகியோரிடமிருந்தான நடப்பு கேள்விகளை சந்திப்பதற்காக விஞ்ஞானவியல் மற்றும் தொழில்நுட்பவியல் தொடர்பிலான தகவல்களில் மிகு அண்மித்த தகவல்களை நூலகத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான உறுப்புரிமையானது நிறுவகத்தின் நூலகமானது வழங்குகின்றது.

தேசிய மற்றும் சர்வதேச தொடர்பிணைப்புக்கள்

நிறுவகமானது உள்ளூர் பல்கலைக்கழகங்களுடன் குறிப்பாக மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கைத்தொழிற்துறை நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக கூட்டிணைந்து பணியாற்றுகின்றது. இதைவிட நிறுவகத்திற்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனும் மற்றும் ஐக்கிய நாடுகளின் முகவராண்மைகளுடன் நெருங்கிய தொடர்புண்டு. இதன் அடிப்படையில் தற்போது பல நிகழ்ச்சித்திட்டங்கள் நிறுவகத்தின் பரிசீலனைக்குள் இருக்கின்றன.