நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் நூலகம் மற்றும் தகவல் பிரிவு

libraryDIV

நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் நூலகம் மற்றும் அதன் தகவல் பிரிவும் ஒரு விசேடமான நூலகம் என்ற அடிப்படையில் செயற்படுவதுடன் அது தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், ஒளிப்படவியல், எந்திரவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கணிசமான அளவு புத்தகங்களையும் பருவ சஞ்சிகைகளையும் மற்றும் ஏனைய கல்வியியல் சாதனங்களையும் கொண்டுள்ளது.

இந்த நூலகத்தின் குறிக்கோளானது தொழில்சார்பியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட ஆளணியினர், பட்டதாரிகள் மற்றும் பட்டப்பின் பட்டதாரிகள் என்போர் நவீன தொழில்நுட்பவியலின் அறிமுகத்தை விரைவாக அறிந்துகொள்ளலாகும்.

நூலக சேகரிப்புக்கள்

நூலகமானது வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் உள்நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட நம்பகமான மூலகங்களிலிருந்து தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட்ட மிகவும் விலைக்கூடிய விசேடத்துவமான அறிக்கைகளினதும் பிரசுரிப்புக்களினதும் கணிசமான சேகரிப்பினை தன்னகத்தே கொண்டுள்ளது. நூலகமானது கைந்நூல்கள், தரவுகள், பாவனையாளர் அளவளாய்வுகள், உற்பத்தி வழிகாட்டல்கள், பிரயோக குறிப்புக்கள், வடிவமைப்பை நோக்கியதாய் புத்தகங்கள், தொலைபேசி விபரக்கொத்துக்கள், VHS, கட்புல நாடாக்கள், DVDக்கள், CD-ROM, தரவுத்தளங்கள் மற்றும் கட்டளைகள் என்பனவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளில் உள்ள குறித்துரைக்கப்பட்ட சஞ்சிகைகள் மற்றும் பருவ சஞ்சிகைகள் என்பன இந்த பிரிவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது.

உறுப்புரிமை

இருவகையான உறுப்புரிமைகள் உள்ளன

தனிப்பட்ட முறையில் நூலக உறுப்புரிமைகளை பெற்றுக்கொள்ளல்

நூலகமானது ஓர் விசேட நூலகம் என்ற அடிப்படையில் செயற்படுவதினால், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனிப்பட்டோர். பட்டப்பின்படிப்பு மற்றும் பட்டம் பயிலும் மாணவர்கள், விஞ்ஞானிகள், புலமையாளர்கள் மற்றும் மேற்கூறப்பட்ட தொழில்நுட்பவியல் துறையில் விசேட ஆர்வமுடைய பொதுமக்கள் ஆகிய வகுதியினர் மட்டுமே நவீன தொழில்நுட்பவியலாளருக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் நூலக உறுப்புரிமையைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள்.

தம்மை பதிவுசெய்வதற்கான கட்டணம் ரூபாய். 500/=

நிறுவன ரீதியில் நூலகத்தில் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளல்

மேற்கூறப்பட்ட தொழில்நுட்பவியல் துறையில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் கைத்தொழிற் துறையினைச் சார்ந்த தொழில்சார்பியலாளருக்கு உதவி செய்யும் முகமாக இந்த முறையானது விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு நிறுவனமானது தன் சார்பாக (5) உறுப்பினர்களை பெயர் குறிப்பீடு செய்யலாம்.

தம்மை பதிவுசெய்வதற்கான கட்டணம் ரூபாய். 2000/=

திறந்திருக்கும் நேரம்

நூலகம் மற்றும் தகவல் சேவைகள் பிரிவானது கிழமை நாட்கள் ஐந்திலும் அதாவது, திங்கட் கிழமையிலிருந்து வௌ்ளிக் கிழமைவரை காலை 8.30 மணியிலிருந்து மாலை 16.15 வரை திறந்திருக்கும்.

சேவைகள்

 

  • இரவல் மற்றும் நோக்கல் வசதிகள்:- நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் பதவியணியினரும் பயிலுனர்களும்.

 

  • நோக்கல் வசதிகள்:- வருகை விரிவுரையாளர்கள், அறிவுறுத்துனர்கள், செயற்திட்டங்களில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள், படடப்பின் பட்டதாரி மாணவர்கள், தொடர் தொழில்சார் அபிவிருத்தி கற்கைநெறி பங்குபெறுனர்கள் மற்றும் தனிப்பட்ட, நிறுவன ரீதியிலான உறுப்புரிமை பெற்றவர்கள்.

 

  • வாசிப்பு வசதிகள்:- நிழற்பட பிரதிசேவை, வருடல் சேவைகள், இணைய வசதிகள், மின்னணுவியல் நூலக சேவை, இடைநூலக இரவல்கள், நடப்பு விழிப்புணர்ச்சி சேவை, தகவல் மற்றும் ஆவண விநியோக சேவை அத்துடன் தொடறரா பட்டியல், தகவல் பொதி சேவை, தெரிவுசெய்யப்பட்ட தகவல்களை பிரபல்யப்படுத்துதல், தகவல் முன்னெச்சரிக்கை சேவைகள்.

 

  • சமூகத்திற்கு சேவை:- பொது மற்றும் தனியார் கைத்தொழிற்துறையை சார்ந்த தொழில்சார்பியலாளருக்கு உறுப்புரிமை வழங்கல், தொழில்சார்பியல் கல்வியிலாளர்களுக்கு (அ. கைத்தொழிற்துறையாளர்கள், ஆ. பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இ. ஒரு குறிப்பிட்ட துறையில் விசேட ஆர்வமுடைய பொது மக்கள்)

இணையத்தினூடாக நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நூலகத்திற்கு நுழைதல். (OPAC) (http://www.accimt.ac.lk).

நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் நூலகத்திலுள்ள நூல்களைப் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் www.accimt.ac.lk இணையத்தினூடாக தொடறரா பட்டியலுக்குள் நுழைவதன் மூலம் அறிந்துகொள்ளலாம். எமது வாடிக்கையாளருக்கு கணிணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் LAN இன் ஊடாக நுழைவதன் மூலம் நூலக சேகரிப்புக்கள் தொடர்பில் விபரங்களை அறிந்துகொள்ளவும், கணிணியினூடாக அணுகவும் முடியும். வாடிக்கையாளர்கள் எழுதியோ, தலைப்பு அல்லது பிரதான சொற்கள் என்பனவற்றை கணிணியில் பதிவுசெய்து தமக்குத் தேவைப்படும் தகவல்களை தேடல் செய்வதற்கு இயலும்.

தனிப்பட்ட அல்லது நிறுவக ரீதியிலான உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்குரிய விண்ணப்பப்படிவமானது எமது நூலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது எமது வலைக்கடபீடத்தில் (www.accimt.ac.lk) இறக்கம் செய்யலாம் அல்லது சுய விலாசம் இடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையினை (9X4)  அனுப்புவதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

நூலகர்

நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்ர் சி. கிளார்க் நிறுவகம்

கட்டுபெத்தை, மொறட்டுவ, 10400, இலங்கை.

தொலைபேசி : +94- 011- 2650839

தொலை மடல்: +94- 011- 2650462

மின்-அஞ்சல்:preethi.liyanage@gmail.com

எமது பணிசெய் குழு

  • திரு. பிரீத்தி லியனகே நூலகர்
  • திருமதி. காஞ்சனா பண்டார நூலக உதவியாளர்