விண்வெளி பிரயோகப் பிரிவு

spaceDIV

விண்வெளி பிரயோகப் பிரிவானது வானியல் ஆராய்ச்சி மற்றும் RS/GIS (சேய்மை உணரி / புவி படவரைபியல் தகவல் முறைமை) ஆகியவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தியிருப்பதுடன் GOTO 45 செ.மீ Cassegrain எனப்படும் மிகப்பெரிய ஒளியியல் தொலைநோக்குக்காட்டியின் தொழிற்பாட்டிற்கும் பொறுப்பாகவுள்ளது. வானியல் ஆராய்ச்சியில் அடிப்படை ஆராய்ச்சி கற்கைகளை முன்னெடுப்பதற்கு தொலைநோக்குக்காட்டி வசதியை பயன்படுத்தும் அக பல்கலைக்கழகங்களுடன் அண்மித்த தொடர்பிணைப்புடன் விண்வெளி பிரயோகப் பிரிவானது நெருங்கிப் பணியாற்றுகின்றது. வானியல் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி விஞ்ஞானத்தை பள்ளிக்கூட மாணவர்களிடையே பிரபல்யப்படுத்தும் நோக்குடன் பல எல்லைக் கடந்த நிகழ்ச்சித்திட்டங்களை விண்வெளிப் பிரயோகப் பிரிவானது தொடங்கியுள்ளது.

1994 ஆம் ஆண்டில் பீஜிங் எனும் இடத்தில் இடம்பெற்ற ஆசியா மற்றும் பசுபிக் அபிவிருத்திக்கான விண்வெளிப் பிரயோகம் எனும் தலைப்பில் இடம்பெற்ற அமைச்சரவை சார் மகாநாட்டின்போது இலங்கையில் விண்வெளித் தொழில்நுட்ப பிரயோகத்திற்கான தேசிய குவிவு முனைப் புள்ளி எனப்படும் சிறப்பு நோக்கத்திற்குரிய நிறுவகமாய் நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்க நிறுவகம் பெயர் குறிப்பீடு செய்யப்பட்டது. புவி வரைபியல் தகவல் முறைமை எனப்படும் பரப்பெல்லையில் உள்ள அறிவு மற்றும் அனுபவத்தை பகிரவும் பரிமாறுவதற்கும் ஒரு தேசிய தளமேடை இருத்தல் வேண்டும் என்ற தேவைப்பாட்டை இனம்கண்டு சேய்மை உணரி மற்றும் உலகமயப்படுத்தல் முறைமையானது அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டிலுள்ள வேறுபட்ட இடங்களிலுள்ள நிலங்கள்மீது பரந்துள்ள வளங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பிலிருக்கும் சமூக பொருளியல் சிக்கல்களை விளிக்கும் பொருட்டு நவீன தொழில்நுட்பவியல் ஆர்த்தர் சி. கிளார்க் நிறுவகமானது பல தேசிய மாநாடுகளை ஒழுங்கமைப்புச் செய்துள்ளது.

எமது பணிசெய்யும் குழு

  • சராஜ் குணசேகரசிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி – வானியல் ஆராய்ச்சி – பதில் சிரேட்ட பிரதி பணிப்பாளர்

இளம் விஞ்ஞானமானி பௌதீகவியலின் விசேட பட்டம், முதலாம் வகுப்பு, கொழும்பு பல்கலைக்கழகம் (1994). அவர் விண்வெளி மற்றும் சூழலியல் விஞ்ஞானம் தொடர்பில் ஒரு முது தொழில்நுட்பவியல்மானி பட்டத்தை இந்தியாவிலுள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார் (2012). அவர் மாறுபடக்கூடிய தன்மையினையுடைய நட்சத்திரங்கள், உமிழ்வு வரி நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்கள் ஆகிய விடய பரப்பெல்லைகளில் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமுடையவர்.

  • இந்திக்க மெதகங்கொடஆராய்ச்சி விஞ்ஞானி

இவர் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து இளம் விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றவர். இவர் SWINBURN எனப்படும் அவுஸ்திரேலியாவிலுள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் வானியல் ஆராய்ச்சி என்னும் துறையில் முது விஞ்ஞானி என்னும் பட்டத்தை உடையவர். இவர் Stellar எனப்படும் உடு விண்மீன் வானியல் ஆராய்ச்சியில் ஆர்வமுடையவர்.

  • ஜனக அதசூரிய – ஆராய்ச்சி விஞ்ஞானி

இவர் கொழும்பு பல்கலைரக்கழகத்தில் பௌதீகவியல் என்னும் விடயத்தில் இளம் விஞ்ஞானமானி விசேட பட்டத்தை பெற்றவர். இவர் விண்வெளி மற்றும் சூழலியல் விஞ்ஞானத்தின் பட்டப்பின்படிப்பு பட்டத்தை உடையவர் (பௌதீகவியல் ஆராய்ச்சி ஆய்வுகூடம், இந்தியா) இவர் இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கத்திலும் இலங்கை பௌதீகவியல் நிறுவகத்திலும் வாழ்நாள் உறுப்பினராவார். விண்வெளி மற்றும் சூழலியல் விஞ்ஞானத்தில் அவருக்குரிய பட்டப்பின்படிப்பு பட்டத்தினை முதலாவது இடத்திலிருந்து ஓர் தங்கப்பதக்கத்துடன் தட்டிக்கொண்டார். அவர் உமிழ்வு வரி நட்சத்திரங்களின் நிறமாலைமானம் மற்றும் குறுங்கால வரையரையைக் கொண்ட மாறுபடக்கூடிய நட்சத்திரங்களின் ஒளிமானம் ஆகிய விடயங்களை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமுடையவர்.

  • டி. சந்தன பீரிஸ்ஆராய்ச்சி விஞ்ஞானி

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானமானி பட்டத்தையும் இந்தியாவிலுள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் விண்வெளி விஞ்ஞானத்தில் முது தொழில்நுட்பவியல்மானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராவார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து பிரயோக மின்னணுவியலில் முது விஞ்ஞானமானி பட்டத்தை பெற்றுக்கொண்டவராவார். இவர் விண்வெளி விஞ்ஞாம், பிரயோக மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க சக்தி, சூரிய சக்தி மற்றும் வானியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமுடையவர்.

ஏ. ஆர். மொஹம்மட் ரீலா – ஆராய்ச்சி விஞ்ஞானி

இளம் விஞ்ஞானமானி RS GIS இல் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா. அவரது ஆராய்ச்சி செய்தல் ஆர்வமானது RS GIS எனும் பரப்பெல்லையில் உள்ளது.

  • லவனன் வெங்கடாச்சலம்ஆராய்ச்சி எந்திரி

இளம் எந்திரவியல்மானி மற்றும் முது எந்திரவியல்மானி (சிறப்பு) (ஐக்கிய இராஜ்யம்) AMIMechE, ARAeS. அவர் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு விமான ஊர்தி முறைமை எந்திரவியல், சென்மதிகளுக்கான வலுமுறைமை ஆகிய துறைகளை தெரிவுசெய்துள்ளார். முதல் கட்ட ஆராய்ச்சிகளாவன சென்மதி, நனோ மற்றும் கியூப் சென்மதி, சென்மதி பணி பகுப்பாய்வு, Orbital Mechanics மற்றும் Space Debris Cataloguing and Removal ஆகிய துறைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

  • புத்திக சம்பத் மரசிங்கஆராய்ச்சி விஞ்ஞானி

இளம் விஞ்ஞானமானி (விவசாயம்). பேராதெனிய பல்கலைக்கழகத்தில் விவசாய எந்திரவியல் (2004). இவர் GIS மற்றும் சேய்மை உணரி ஆகிய துறைகளில் பட்டப்பின்படிப்பு பட்டத்தை 2009 ஆம் ஆண்டு பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானவியல் நிறுவகத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். அவர் ஆராய்ச்சிகளை சேய்மை உணரி / GIS / UAV மற்றும் கள நிறமாலைமானம் ஆகிய துறைகளில் முன்னெடுப்பதற்கு விருப்பம் உடையவர்.

  • கே. மஹிந்தபால – ஆராய்ச்சி எந்திரி – தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம்

இவர் ஐக்கிய இராஜ்யத்திலிருக்கும் கீல் பல்கலைக்கழகத்திலிருந்து தகவல் தொழில்நுட்பத்திற்கான முதுமானி விஞ்ஞான பட்டத்தை பெற்றவர் ஆவார். அத்துடன் இவர் பட்டய ஒரு எந்திரவியலாளருமாவார் (எந்திரவியல் மற்றம் – ஐக்கிய இராஜ்யம்). இவர் CEng மற்றும் பிரித்தானிய கணணி சங்கத்தின் தொழில்சார்பியல் உறுப்பினராவார்.

  • நிலுக்ஷிக ஜயவர்தணஆராய்ச்சி விஞ்ஞானி

இளம் விஞ்ஞானமானி, அளவையியல் விஞ்ஞானம் (விசேடம்). இவர் ஔிப்பட அளவியல் மற்றும் சேய்மை உணரி எனும் துறையில் இரண்டாம் மேல் வகுப்புப் பிரிவு பட்டத்தை உடையவர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நான்காவது வருடாந்த ஆராய்ச்சி கூட்டத்தொடரின்போது Wavelet Based Satellite image Segmentation என்னும் தலைப்பில் அமைந்த பதாகைக்கு சிறந்த பதாகை எனப்படும் பரிசினை வென்றெடுத்தவர் ஆவார். இவர் சேய்மை உணரி விண்ணப்பம், Satellite Image Segmentation மற்றும் Artificial Neural Networks ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் ஆர்வமுடையவராவார்.

  • அருணி திசாநாயக்கமுகாமைத்துவ உதவியாளர்
  • கமால் சாந்த பெரேரா – ஆய்வுகூட உதவியாளர்