தகவல் தொழில்நுட்ப பிரிவு

ITDIV

நாம் என்ன செய்கின்றோம்?

தகவல் தொழில்நுட்ப பிரிவின் நடவடிக்கைகளாவன பிரதானமாக ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள், தொழில்நுட்பவியல் மாற்றீடு மற்றும் பயிற்சி கற்கை நெறிகள் ஆகிய பிரதான வகுதிகளுக்குள் உள்ளடக்கப்படும். கடந்த காலங்களைப் பொறுத்தவரையில், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஒரு தீர்வாக மென்பொருள் அபிவிருத்தியினை முன்னெடுத்தல் மற்றும் பொது மக்களுக்காக தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அறிவுப்பூர்வமான விடயங்களை கற்கைநெறிகளினூடாக மாற்றீடு செய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

ஆராய்ச்சி

தற்போது “இடத்துரிதாக்கல்” மற்றும் “நோக்கினை அடிப்படையாகக் கொண்ட தன்னியக்கவாக்கம்” ஆகிய பரப்பெல்லைகளில் அவதானம் செலுத்தப்படுகின்றது.

இடத்துரிதாக்கல் செய்கையில், தெரிவுசெய்யப்பட்ட இரு திறந்த மென்பொருள் மென்பொருள் மூலகங்களாவன சிங்கள மொழிக்கும் மற்றும் இலங்கைத் தமிழ் மொழிக்கும் மாற்றப்பட்டது. ஏனைய நாடுகள் தமது தாய்மொழிக்கு ஏற்கனவே இருந்த மொழியினை இடத்துரிதாக்கல் செய்யும்போது முகம்கொடுத்த பிரச்சினைகளையும் அப்பிரச்சினைகளின் தீர்வு நடவடிக்கைகளையும் மிகக் கவனமாக நுணுகி ஆராய்ந்த பின்னர் கணணி மென்பொருள் மொழியினை சிங்களம் மற்றும் இலங்கைத் தமிழுக்கு மாற்றீடு செய்தல் தொடர்பில் உயர் அவதானம் செலுத்தப்பட்டது.

கணணி மென்பொருளுடன் தொடர்புடைய பல தகவல்களை தமது உள்நாட்டிற்குரிய மொழியிலேயே பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களுக்கு உதவிசெய்யும் வகையில் பல பொதிகளை எதிர்காலத்தில் விருத்திசெய்வதற்கு பிரிவானது தனது இலக்காகக் கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெறக்கூடியதாகவிருக்கும் தகவல்களாவன இலங்கையர்கள் எதுவித மொழித்தடங்கலும் இன்றி தமது உள்நாட்டு மொழியிலேயே பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.

இதனுடன் “நோக்கினை அடிப்படையாகக் கொண்ட தன்னியக்கவாக்கம்” எனும் பரப்பெல்லையின் பிரயோகங்களிலும் நாம் எமது அவதானத்தைச் செலுத்துகின்றோம். இவ்விடயம் தொடர்பில் தொடக்கநிலை ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தன்னியக்கவாக்க பிரயோகங்கள் மற்றும் மருத்துவம் மற்றும் ஏனைய துறைகளில் குறிப்பிட்ட சில நிலைமைகளை இனம்காணல் அத்துடன் பகுப்பாய்வு செய்தல் போன்ற விடயங்களில் முக்கியத்தும் பெறுகின்ற Still images மற்றும் Video stream ஆகியவற்றினை பகுப்பாய்வு செய்வதில் இப்பரப்பெல்லை உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வாடிக்கையாளரை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள்

PHP மற்றும் MySQL என்பனவற்றை பயன்படுத்தி வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வலைக்கடபீடத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமை விருத்திசெய்யப்பட்டது. அத்தகைய பல கருத்திட்டங்கள் எமது பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக பூரணப்படுத்தப்பட்டது. வேறுபட்ட அரசதுறை அமைப்பாண்மைகளுக்காக நிதி, மனிதவள முகாமைத்துவம் மற்றும் இருப்பு முகாமைத்துவம் (நிலையான சொத்துக்கள் மற்றும் நுகர்வு சாதனங்கள்) இதர.. ஆகிய துறைகளுக்கு உரித்தான தரவுத்தள முகாமைத்துவ முறைமையை பிரதானமாக கருத்திற்கொண்டு ஏனைய மென்பொருட்கள் விருத்திசெய்யப்பட்டன.

இவற்றிற்குரிய தீர்வுகளாவன “ஒரு-தடவை” விருத்தி என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது தொடர்ச்சியாக தீர்வுகள் பெற்றுக்கொள்ளப்படுவதற்கு பேணல் உடன்படிக்கை கைத்சாத்திடப்பட்டல் வேண்டும்.

கிராமத்திற்கு தொழில்நுட்பம் (தொழில்நுட்ப மாற்றீடு)

பிரிவானது மென்பொருள் அபிவிருத்தியில் ஈடுபடுவதுடன் தகவல் தொழில்நுட்பப் பாவனையை பொது மக்களிடையே குறிப்பாக கிராமியப் புறங்களில் பிரபல்யப்படுத்துவதில் தனது அவதானத்தை பிரதானமாக செலுத்துகின்றது. மொழிப் பிரச்சினைகளின் காரணமாக கணணியைப் பயன்படுத்துவதில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை தவிர்த்துக்கொள்ளுமுகமாக இடத்துரிதாக்கல் மற்றும் ஏனைய பொதிகளை “விதாதா நிலையங்களினூடாக” (விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராயச்சி அமைச்சினால் தொடங்கப்பட்டு நாடெங்கிலும் இருக்கின்ற இந்த விதாதா நிலையங்களின் எண்ணிக்கை 250 இற்கும் அதிகமாகும்) பிரபல்யப்படுத்தி பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் பொது மக்களும் இந்த வசதியை இந்த இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

பொது மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் பொருட்டு பிரிவானது பல பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டங்களாவன இரு வகுதிகளுக்குள் உள்ளடக்கப்படும்., அவையாவன பொது நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தொழில்சார்பியல் நிகழ்ச்சித்திட்டங்கள். பொது நிகழ்ச்சித்திட்டம் என்னப்படும்போது அது பள்ளிக்கூடத்தை விட்டு அண்மையில் விலகியவர்கள் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லாப் பிரிவை சார்ந்த ஏனையவர்கள் என்போருக்காக நடாத்தப்படுகின்தறது. இவர்களுக்காக நடாத்தப்படும் இந்த பொது நிகழ்ச்சித்திட்டத்தினூடாக அவர்கள் மென்பொருள் பொதிகளைப் பற்றி கற்றறிந்துகொள்ளலாம். தகவல் தொழில்நுட்பத்திலர் ஒரு குறித்துரைக்கப்பட்ட பரப்பெல்லை மற்றும் அவற்றில் இருக்கின்ற உயர் தரமான பண்பியற் கூறுகள் என்பனவற்றை கற்றறிந்துகொள்ள விரும்புகின்ற வகுதியினரை கருத்திற்கொண்டு கைத்தொழிற்துறையாளர்களை இலக்காக் கொண்டு நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டமே தொழில்சார்பியல் நிகழ்ச்சித்திட்டமாகும்.

எமது பணிசெய் குழு

  • ரோஹன தசநாயக்க, முறைமை பகுப்பாய்வாளர், பிரிவின் தலைவர்

இவர் ருஹூனு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியலில் இளம் விஞ்ஞானமானி பட்டத்தை உடையவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிணி தொழில்நுட்பத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினையும் அத்துடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஒரு முது விஞ்ஞானமானி பட்டத்தையும் கொண்டவர். அவர் வலைகடபீடத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் விருத்தியில் ஈடுபட்டுள்ளதுடன் அவரின் ஆராய்ச்சி ஆர்வமானது அகமொழி கணிணி மயப்படுத்துதலில் உள்ளது.

  • ரசிக சோமதிலக, சிரேட்ட முகாமை பகுப்பாய்வி

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானமானி (எண்கணிதவியலில் விசேட பட்டத்தை பெற்றவர்) இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணிணிப் பள்ளியில் முதுவிஞ்ஞானமானி பட்டத்தையும் கொண்டுள்ளார். இவர் தரவு மற்றும் முகாமைத்துவ முறைமை மற்றும் வடிவமைப்பு அத்துடன் வலைக்கடபீடத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் பிரயோகம் ஆகிய பரப்பெல்லைகளில் ஈடுபட்டுள்ளார்.

  • அஞ்சன ஜயசிங்க, சிரேட்ட மென்பொருள் எந்திரி

இவர் அமெரிக்காவிலுள்ள ஒக்லறோமா பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானமானி (எந்திரவியல்) பட்டதாரி ஆவார். இவர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் முது விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றவர் என்பதுடன் பட்டய நிறுவக முகாமைத்துவ கணக்கியலில் (CIMA) இறுதி கட்டத்தையும் வெற்றிகரமாக சித்தியெய்தவர். இவரும் தரவுத்தள முகாமைத்துவ முறைமையில் தன்மை ஈடுபடுத்தியுள்ளதுடன் அவரின் ஆராய்ச்சி ஆர்வமானது விம்ப செயன்முறையாக்கம் என்னும் பரப்பெல்லையில் உள்ளது.

  • லக்‌ஷாணி கருணாரத்ண, முறைமை பகுப்பாய்வாளர்

இவர் ஶ்ரீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானமானி (விசேடம்) பட்டத்தை எண்கணிதவியலில் பெற்ற பட்டதாரியாவார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிணிப் பள்ளியில் தகவல் தொழில்நுட்பம் என்னும் பரப்பெல்லையில் பட்டம்பெற்ற பட்டதாரியாவார். இவர் தரவுத்தளம் முகாமைத்துவம் மற்றும் வலைக்கடபீடத்தை அடிப்படையாகக் கொண்ட பிரயோக அபிவிருத்தி ஆகிய துறைகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

  • சந்திமா ரணசிங்க, ஆராய்ச்சி எந்திரி

இவர் திறந்த பல்கலைக்கழகத்திலும் லண்டன் மெட்ரோ பொலிடன் பல்கலைக்கழகத்திலும் இளம் விஞ்ஞானமானி (எந்திரவியல், சிறப்பு) பட்டத்தைப் பெற்றவர். இவர் ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள Sheffield Hallam பல்கலைக்கழத்தில் தொலைதொடர்பாடல் மற்றும் மின்னணுவியல் எந்திரவியலில் முது விஞ்ஞானமானி கற்கையை கற்றுக்கொண்டிருக்கிறார். இவரின் ஆராய்ச்சி ஆர்வமானது செயற்கையான நியூரல் வலையமைப்புக்கள் செயற்கையான புத்திசாதுரியம், விம்ப செயன்முறையாக்கம் மற்றும் Cyber பாதுகாப்பு ஆகியவற்றில் உள்ளது.

  • ஷிரோமி லக்மாலி, ஆராய்ச்சி எந்திரி

இவர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானமானி, எந்திரவியல் (சிறப்பு) பட்டத்தைப் பெற்றவர். இவரின் ஆராய்ச்சி ஆர்வமானது தரவுத் தேடல்கள் மற்றும் இயந்திரக் கற்கை ஆகிய பரப்பெல்லைகளில் உள்ளது.

  • சமான் அதுலுவகே